NFPE
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் - குரூப் ‘C’
கோட்டக் கிளை – ஈரோடு – 638 001.
44 – வது கோட்ட மாநாடு
ஈராண்டறிக்கை
நாள் : 18.08.2019
இடம் : ஈரோடு தலைமை அஞ்சலகம்
ஊழியர் நலன் காப்பதற்காகசமரசமற்ற போராட்டம்தியாகங்கள் செய்யும் மனப்பக்குவம்ஆகிய உயரிய பண்புகளைநம்மில் விதைத்துச் சென்றNFPE முன்னோடிகளுக்குசமர்ப்பணம்
நாள் : 18.08.2019
இடம் : ஈரோடு தலைமை அஞ்சலகம்
NFPE
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் - குரூப் ‘C’
கோட்டக் கிளை – ஈரோடு – 638 001.
44வது கோட்ட மாநாடு ஈரா ண்டறிக்கை
தோழியர்களே ! தோழர்களே !
வணக்கம். 09.07.2017-ல்
நடைபெற்ற கடந்த 43-வது மாநாட்டிற்குப் பிறகான
கோட்டச்சங்க செயற்பாடுகள் , நடத்திய இயக்கங்கள் , போராட்டங்கள் பற்றிய
இவ்வறிக்கையினை செயற்குழுவின் சார்பில் இப்பேரவையில் சமர்ப்பிக்கின்றேன்.
அஞ்சலி
கியூபா தலைவர் தோழர்.பிடல் காஸ்ட்ரோ,முன்னாள் பிரதமர், அடல்
பிகாரி வாஜ்பாய் , முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, மேற்கு வங்க
தொழிற்சங்க தலைவர் தோழர்.நிருபம்சென்,முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர்,
முன்னால் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,கவிஞர் முத்துகுமார், எழுத்தாளர்
பிரபஞ்சன் ஆகியோரின் மறைவிற்கு இம்மாநாடு அஞ்சலி செலுத்துகிறது.
தமிழ்
மாநில , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தலைவரும், முன்னாள் அஞ்சல் நான்கின்
மாநில செயலருமான தோழர். AG பசுபதி, NFPTE முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.D.ஞானையா,முன்னாள் அகில
இந்திய செயல் தலைவரும்,ஈரோடு கோட்டத்தின் முன்னாள் கோட்டச் செயலருமான தோழர்.NG என்கிற N.கோபாலகிருஷ்ணன்,
ஈரோடு தலைமை அஞ்சலகத்தின் முன்னால் முதுநிலை அஞ்சல் அதிகாரி சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட
பணியிலிருக்கும் பொழுது உயிரிழந்த ஈரோடு கோட்டச் சங்கத்தைச் சார்ந்த P3 ,P4
மற்றும் GDS தோழமைகள் ஆகியோரின் மறைவிற்கு இம்மாநாடு அஞ்சலி
செலுத்துகிறது.
மேலும் தீவிரவாதிகளின் தாக்குதல், மற்றும் தேச
பாதுகாப்புப் பணியில் ஏற்பட்ட சண்டைகளில் / போர்களில் தம் இன்னுயிரை ஈந்த இராணுவ
வீரர்களுக்கும் , கேரள வெள்ளம், கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர், விபத்துக்கள்,
பெண்களின் மீதான வன்கொடுமையில் , மத / ஜாதிய வன்கொடுமையில், தூத்துக்குடி STERLITE ஆலை
எதிர்ப்புபோராட்ட துப்பாக்கி சூட்டில், NEET தேர்வின் கொடுமையால், உழைக்கும்
மக்களின் உரிமை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள் என அனைவருக்கும்
இம்மாநாடு அஞ்சலி செலுத்துகின்றது.
சென்ற கோட்ட மாநாடு :
மாநில தலைவர் தோழர்
P.மோகன் அவர்கள் துவக்க உரையுடனும், தோழர்.A.ராஜேந்திரன்,தோழர்.எழில்வாணன் ஆகியோர்
சிறப்புரையுடனும் மிகச் சிறப்பாக கடந்த 09.07.2017ல் நடைபெற்ற நமது 43-வது
ஈராண்டு மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் ஈரோடு கோட்டச் சங்க நிர்வாகிகளாக ஏகமனதாக
தேர்ந்தேடுக்கபட்டனர்.
கோட்டத்தலைவர்
:
தோழர்.
S. செல்லமுத்து, SPM, Erode East SO.
உதவி
தலைவர்கள் :
தோழர் M. ரவிசங்கர்,
Treasurer, Erode HO
தோழர் T.V. ராகவன்
, SPM, Cauvery RS SO
தோழர் C. யுவராஜ்,
PM Gr-I, Pallipalayam SO
தோழர் S. கோபாலகிருஷ்ணன்,
PA, Erode HO
கோட்ட
செயலர்:
தோழர்
N. கார்த்திகேயன், Instructor, WTC, Karungalpalayam
உதவி
செயலர்கள் :
தோழர்
K. சுவாமிநாதன், SPM, Erode North SO
தோழர் N. ஆனந்தகுமார்,
PA, Veerappanchatram SO
தோழர் V. அருண்குமார்,
PM GR- I, Surampatti SO
தோழர் D. சக்திவேல்,
SPM, Pasur SO
தோழியர் M. சுபப்பிரியா,
OA, O/o SSPOs, Erode
கோட்ட
நிதி செயலர்
:
தோழர் S. கோவிந்தராஜூ, PA,Karungalpalayam SO
உதவி
நிதி செயலர்
:
தோழர் K. கோபிநாத்,
PA, Erode Collectorate SO
அமைப்பு செயலாளர்கள்:
தோழர்
P. சுரேஷ், ME, O/o SSPO, Erode
தோழர் R. செந்தில்குமார்,
PA, Erode HO
தணிக்கையாளர்
; தோழியர் C. சத்தியபாமா,
Accountant, Erode HO
அமைப்பு நிலை
மேற்கண்ட நிர்வாகிகள் பட்டியலில்
உள்ளவர்கள் மட்டுமல்ல இன்னும் பல முன்னணித் தோழர்களும் தங்களை முழுமையாக
ஈடுபடுத்திக்கொண்டதன் விளைவாக கீழே பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு இயக்கங்களை ஈரோடு
கோட்டத்தில் நாம் வெற்றிக்கரமாக நடத்தியுள்ளோம்.ஈரோடு கோட்ட FNPOவின் தற்போதைய JCA
கன்வீனர் தோழர் P.மோகன் அவர்களின் பூரண ஒத்துழைப்போடு பல இயக்கங்களை நடத்தி
வருகிறோம். குறிப்பாக அது NFPE சம்மேளன,மத்திய , மாநில சங்க அறைகூவலாகவோ, NFPE
தமிழ் மாநில COC அறைகூவலாகவோ மட்டும் இருந்தாலும்கூட ஈரோட்டில் JCA சார்பாகவே
அத்துணை இயக்கங்களையும் இணைந்தே நடத்தி உள்ளோம் என்பதை அவருக்கான நன்றியுடன் இங்கே
நாம் பதிவு செய்கிறோம். இனிவரும் காலங்களில் இந்த ஒத்துழைப்பு தொடர இம்மாநாடு
வேண்டுகிறது.
தற்சார்புடன் கோட்டச் சங்கம்
கடந்த ஈராண்டு அறிக்கையில் நாம்
ஆதங்கப்பட்டு வேண்டுகோள் விடுத்த விஷயங்களில், தற்சமயம் நமது கோட்ட சங்கமானது
தனக்கென்று சங்க பணிகளுக்கேன்றே தனியாக
1. மடிக்கணினி (Laptop) – ஒன்று
2. ஒளி அச்சுப்பொறி (Laser
Printer) – ஒன்று
போன்ற உபகரணங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். சங்க செயற்பாடுகள் மென்மேலும் செம்மை பெற
சங்கத்திற்கென சொந்தமாக இடம், அலுவலகம், வைப்பு தொகை சேமிப்பு என்ற நிலைமைக்கு படிப்படியாக
முன்னேற முயற்சிகள் எடுப்போமெனவும், அதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்குமாறும்
இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
சென்ற மாநாட்டிற்கு பின் நாம் நடத்திய இயக்கங்கள்:
சங்க கூட்டங்கள்
பொதுக்குழு கூட்டங்கள் :
18.08.2017 , 16.11.2017
, 24.01.2019 , 11.02.2019
செயற்குழு கூட்டங்கள் :
20.07.2019 , 14.08.2019
இதர இயக்கங்கள்
வ.எண்
|
தேதி
|
இயக்கம்
|
1
|
13.07.2017
|
தமிழக NFPE இணைப்புக்குழு அறைகூவலின்படி 20
அம்ச கோரிக்கைகளை முன்வவைத்து முழுவீச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் வேலை
நிறுத்தம் (பின்னர் வாபஸ்
வாங்கப்பட்டது)
|
2
|
23.08.2017
|
NFPE சம்மேளனத்தின் அறைகூவல்படி 10 அம்ச கோரிக்கைகளை
முன்வைத்து ஒரு நாள் வேலைநிறுத்தம்
|
3
|
29.11.2017
|
NFPE சம்மேளனத்தின் அறைகூவலின்படி GDS கமிட்டி
பரிந்துரைகள் அமலாக்கம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை
முன் வைத்து ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம்
|
4
|
17.12.2017
|
தோழர்.M.துரைபாண்டியன் மற்றும் தோழர்.S. கருணாநிதி அவர்கள் பங்கேற்ற மாபெரும் சிறப்பு கருத்தரங்குக் கூட்டம்
|
5
|
06.04.2018
|
தமிழக NFPE COCயின் அறைகூவலின்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க
வேண்டி ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்பாட்டம்
|
6
|
19.04.2018
|
சென்னை CPMG அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்
பங்கேற்பு
|
7
|
10.05.2018
|
GDS சம்பள கமிட்டி அமலாக்கத்திற்காக ஈரோடு தலைமை அஞ்சலகம்
முன்பு ஆர்பாட்டம்
|
8
|
22.05.2018 முதல் 25.05.2018 வரை
|
தமிழக NFPE இணைப்புக்குழு சார்பில் GDS சம்பள கமிட்டி அமலாக்கத்திற்காக அறிவித்த காலவரையற்ற
வேலைநிறுத்தத்தில் மாநில அளவிலேயே ஒரே உறுதியுடன் தொடர்ந்து 4 நாட்கள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது.CSI migration அறிவித்த அதே தேதியில் ,இந்த வேலைநிறுத்தத்தில்
ஈரோடு கோட்ட சங்க உறுப்பினர்கள் காட்டிய உறுதி மிகவும் பாராட்டிற்குரியது
|
9
|
29.05.2018
|
GDS சம்பள கமிட்டி அமலாக்கத்திற்காக மதிய உணவு இடைவெளி
ஆர்பாட்டம் ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு
|
10
|
31.05.2018
|
GDS சம்பள கமிட்டி அமலாக்கத்திற்காக உண்ணாவிரத போராட்டம்
ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு
|
11
|
21.06.2018 முதல் 22.06.2018 வரை
|
மாநில சங்கத்தின் அறைகூவலின்படி CSI குளறுபடிகளுக்கு
எதிராக கருப்பு அட்டை அணிந்து
போராட்டம்
|
12
|
21.06.2018
|
மாநில சங்கத்தின் அறைகூவலின்படி CSI குளறுபடிகளுக்கு
எதிராக மதிய உணவு இடைவெளி ஆர்பாட்டம் ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு
|
13
|
22.06.2018
|
மாநில சங்கத்தின் அறைகூவலின்படி CSI குளறுபடிகளை
சரிசெய்யக்கோரி தமிழ்நாடு CPMG அவர்களுக்கும் அஞ்சல் துறையின் Secretary அவர்களுக்கும்
ஈரோடு கோட்டச் சங்கம் சார்பில் SAVINGRAM அனுப்பப்பட்டது
|
14
|
06.07.2018 முதல் 09.07.2018 வரை
|
மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி CSI குளறுபடிகளுக்கு
எதிராக கருப்பு அட்டை அணிந்து போராட்டம்
|
15
|
10.07.2018
|
மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி CSI குளறுபடிகளுக்கு
எதிராக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்
|
16
|
25.09.2018
|
GDS சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் GDS சம்பள கமிட்டி
கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் – ஈரோடு தலைமை
அஞ்சலகம்
|
17
|
04.10.2018
|
GDS GDS சம்பள கமிட்டி கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி ஒரு நாள்
உண்ணாவிரத போராட்டம் – சென்னை COவில்
|
18
|
06.12.2018
|
மாநில சங்கத்தின் அறைகூவலின்படி ஈரோடு கோட்ட சங்கம் மற்றும்
ஈரோடு மனமகிழ் மன்றம் சார்பில் சுமார் Rs.65,000 / - [ரூபாய் அறுபத்தி ஐந்தாயிரம்] வசூல் செய்து கஜா புயலால்
பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி பகுதி GDS தோழமைகளுக்கு நேரில் சென்று
துண்டு/போர்வை/லுங்கி/சேலை ஆகியவற்றை விநியோகம் செய்து வந்தது.
|
19
|
28.12.2018
|
மத்திய JCA மற்றும் CCGEW அறைகூவலின்படி NPSஐ எதிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு - ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்பாட்டம்
|
20
|
08.01.2019& 09.01.2019
|
மத்திய JCA மற்றும் CCGEW அறைகூவலின்படி NPSஐ எதிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு 2 நாட்கள்
வேலைநிறுத்தம்
|
21
|
25.01.2019
|
ஈரோடு அஞ்சல் JCA சார்பில் பாசூர்/சிவகிரிமுறைகேடுகளில் குற்றவாளிகள் மீது
தக்க நடவடிக்கை
எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி - ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்பாட்டம்
|
22
|
03.02.2019
|
சென்னையில் மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பு. மேலும் பாசூர்/சிவகிரிமுறைகேடு case தொடர்பாக அகில
இந்திய செயலர்,DEFENSE
ASSISSTANT தோழமைகள் பலரை சந்தித்து ஆலோசனை கேட்டறிதல்
|
23
|
04.02.2019
|
சென்னையில் மாநில சங்க அலுவலகத்தில் அகில இந்திய முன்னாள் செயலர்
தோழர்.KVS,முன்னாள் அகில இந்திய செயல் தலைவர் தோழர்.NG,மாநில தலைவர்
தோழர் செல்வகிருஷ்ணன், முன்னாள் மாநில செயலர் தோழர்.JR, மாநில செயலர்
தோழர்.வீரமணி, ஆகியோரை
சந்தித்து பாசூர்/சிவகிரிமுறைகேடு case தொடர்பாக ஆலோசனை
கேட்டறிதல்
|
24
|
28.10.2018
|
ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில் GDS தோழமைகளுக்கான DARPAN குறித்த விளக்க
வகுப்பு
|
25
|
13.02.2019
|
ஈரோடு மாவட்ட அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் சிறப்பு
கருத்தரங்கம்
|
26
|
28.02.2019
|
மத்திய மற்றும் மாநில சங்கத்தின் மூலம் Directorateக்கும் , CPMG அவர்களுக்கும் சிவகிரி/பாசூர்
முறைகேடு குறித்த சங்கத்தின் வேண்டுகோளை கடிதம் மூலம் அளித்து வலியுறுத்தியது
|
27
|
23.04.2019
|
மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி NPS திட்டத்தை
எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம்
|
28
|
23.04.2019
|
மறைந்த தோழர் NG அவர்களின் மறைவிற்கு ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில்
கண்ணீர் அஞ்சலி செலுத்தியது
|
29
|
09.05.2019
|
ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மறைந்த
தோழர் NG அவர்களின் உருவப்பட திறப்பு விழா
|
30
|
02.06.2019
|
சிவகிரி/பாசூர் முறைகேடு குறித்து விவாதிக்க ஈரோடு கோட்ட சங்கத்தின்
சார்பில் சென்னை சென்று மாநில சங்கத்தையும் , மற்ற defence assistant களையும் சந்தித்தது
|
31
|
11.06.2019
|
மேற்கு மணடலத்தின் கீழ் உள்ள அனைத்து கோட்ட/கிளைச் செயலர்கள் , மாநில சங்க நிர்வாகிகளுடனும்
, சங்க
முன்னோடிகளுடனும் சந்திப்பு – ஈரோடு
|
32
|
11.06.2019
|
சிவகிரி/பாசூர் முறைகேடு குறித்தும் , மற்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொருட்டும் சங்க முன்னோடிகளுடன்
ஈரோடு கோட்டசங்க தோழமைகள் சந்திப்பு
|
33
|
18.06.2019
|
AIPRPA அறைகூவலின்படி
மாத ஊதியம்/ஓய்வூதியம் தாமதமாக வரவு
வைக்கப்படுவதை கண்டித்து ஆர்பாட்டம் - ஈரோடு தலைமை
அஞ்சலகம்
|
34
|
09.07.2019
|
மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி CSI குளறுபடிகளுக்கு
எதிராக ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்பாட்டம்
|
35
|
29.07.2019
|
மத்திய JCAவின் அறைகூவலின்படி 23 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம் - ஈரோடு தலைமை அஞ்சலகம்
|
36
|
29.07.2019
|
மத்திய JCA வின் அறைகூவலின்படி 23 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஈரோடு கோட்ட அஞ்சல் JCAவின் சார்பில் The Secretary,
Dept. of Posts அவர்களுக்கு
கடிதம் அனுப்பியது
|
மாநில சங்கம்:
நமது மாநில சங்கத்தின் கடந்த மாநில மாநாடு 25,26, மற்றும்
27 .11.2017 ஆகிய
தேதிகளில் செங்கல்பட்டு நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநிலத் தலைவராக : தோழர். M.செல்வகிருஷ்ணன்
மாநிலச் செயலராக : J.ராமமூர்த்தி
மாநில நிதிச் செயலராக : A. வீரமணி
ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். ஈரோடு கோட்டச் சங்கத்தின் சார்பில் நமது தோழமைகள் S.செல்லமுத்து, K.சுவாமிநாதன் ,
N.கார்த்திகேயன், V.அருண்குமார் ,M.ராமகிருஷ்ணன் மற்றும் N.ஆனந்தகுமார் ஆகியோர்
இந்த மாநாட்டில் பங்கேற்றனர். நமது மேற்கு மண்டலத்தில் இருந்து திருப்பூர் தோழர்
A. ராஜேந்திரன் அவர்கள் மேற்கு மண்டல செயலராகவும் , கோவை கோட்ட தோழர்
N.சிவசண்முகம் அவர்கள் மாநில உதவிச் செயலராகவும் தேர்தெடுக்கப்பட்டனர். மேற்கு
மண்டல அளவில் உள்ள இந்த இரண்டு மாநிலச் சங்க நிர்வாகிகளும் நமது கோட்ட
பிரச்சனைகளை/கோரிக்கைகளை நமது மேற்கு மண்டல அலுவலகத்தில் கொண்டு சென்று தீர்வு
பெற்றுத் தந்து வருகின்றனர்.
மேலும் தோழர்.JR பணி ஓய்வு பெற்றதை அடுத்து 03.02.2019 அன்று
நடைபெற்ற மாநில கவுன்சில் கூட்டத்தில்
மாநிலச் செயலராக : A. வீரமணி
மாநில நிதிச் செயலராக : A.கேசவன்
ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
மாநில சங்கத்தின் சீரிய முயற்சியால் நமது ஊழியர்களுக்கு பற்பல நன்மைகள் பெற்று வருகிறோம். அவற்றில் மிக
மிக முக்கியமானதும்,அதே சமயத்தில் நமது கோட்டத்திற்கும் பெரும்பலமாகவும் அமைந்த
சாதனைகளை கொடுத்துள்ளோம்.
1.
அதிகரிக்கப்பட்ட
PA Vacancies மூலம் நமது கோட்டத்திற்கு மட்டும் 14 PAக்கள் [from Postman cadre –
LGO exam வழியாக] கூடுதலாக கிடைத்தனர். நேரடி தேர்வில் நமது கோட்டத்திற்கு PAக்கள்
பெரும்பாலும் கிடைக்காத சமயத்தில் இது நம் கோட்டத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்
2.Pending
உள்ள அனைத்து Rule38 case களின் மீதும் மாநில அளவில் நடவடிக்கை எடுத்தமையாள நமது
ஈரோடு கோட்டத்தில் இருந்து சுமார் 7 தோழமைகள் அவரவர் சொந்த ஊரிற்கு/கோட்டத்திற்கு
மாற்றலாகி மகிழ்ச்சியுடன் சென்றனர். அதே சமயத்தில் நமது ஈரோடு கோட்டத்திற்கு
புதிதாக 14 தோழமைகள் inward வந்தமையால் நமக்கு இன்னும் கூடுதல் PA கள் கிடைத்துள்ளது.
இது நமது கோட்டத்திற்கு மேலும் PA எண்ணிக்கையை அதிகபடுத்தி உள்ளது
கடந்த 2016ல் மத்திய அரசின் DEMONITIZATION பணியில்
ஈடுபட்டு இருந்த நமது அஞ்சல் ஊழியர்களுக்கு HONORARIUM கிடைக்கச் செய்தது, இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.
மேலும் ஈரோடு கோட்டப் பிரச்சனைகளுக்கு மாநில சங்கம் மூலம்
நமது தமிழ்நாடு CPMG மற்றும் மேற்கு மண்டல PMG அவர்களுக்கு அவ்வப்போது கடிதம்
அனுப்பி வலியுறுத்தி வருகின்றது. மாநில சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நமது கோட்ட
சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளும் , நெஞ்சார்ந்த நன்றிகளும்.
அகில இந்திய சங்கம்:
நமது அகில
இந்திய சங்கத்தின் கடந்த மாநாடு, 6 , 7 , 8 மற்றும் 09.08.2017 ஆகிய தேதிகளில்
பெங்களூர் மாநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அகில இந்திய தலைவராக : தோழர்.J.ராமமூர்த்தி
பொதுச் செயலராக : தோழர்.R.N.பராசர்
நிதிச் செயலராக : தோழர்.பல்வீந்தர் சிங்
ஆகியோரும் தமிழகத்தைச் சார்ந்த A.வீரமணி,S.ரகுபதி, ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாகவும்
தேர்தெடுக்கப்பட்டனர். ஈரோடு கோட்டச் சங்கத்தின் சார்பில் நமது தோழமைகள்
S.செல்லமுத்து, K.சுவாமிநாதன் , N.கார்த்திகேயன், V.அருண்குமார் மற்றும் M.ராமகிருஷ்ணன்
ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
அஞ்சல் 3 ஊழியர்களின் கோரிக்கைகளுக்காகவும் , NFPE
சம்மேளன அறைகூவலுக்கிணங்கவும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவலுக்கிணங்கவும் பல போராட்டங்களை
திட்டமிட்டு நடத்தும் மத்திய சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.
நமது ஈரோடு கோட்டத்தைப்
பொறுத்தமட்டில் சிவகிரி/பாசூர் முறைகேடுகள் மீதான நியாமான நடவடிக்கை எடுக்க கோரியும், RICT
தொழில்நுட்பத்தில்/கருவியில் உள்ள
குளறுபடிகளை சரிசெய்யக் கோரியும் நமது ஈரோடு கோட்ட சங்கம் சார்பில் வைத்த வேண்டுகோளை ஏற்று, அகில இந்திய சங்கமானது நமது
துறை நிர்வாகத்திற்கு விரிவான கடிதங்கள் மூலம் மேற்கூறியவற்றை துரிதப்படுத்த
நடவடிக்கை எடுத்தமைக்கு நமது கோட்ட சங்கத்தின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
NFPE சம்மேளனம் :
தோழர்.கிரிராஜ் சிங் [R3] தலைவராகவும்,
தோழர்.R.N.பராசர் [P3] அவர்கள் மா.பொதுச் செயலராகவும் , தமிழகத்தைச் சேர்ந்த
A.மனோகரன் செயல் தலைவராகவும் , தோழர்.S ரகுபதி உதவி மாபொதுச் செயலராகவும் உள்ளனர்.
தனித்த போராட்டங்களையும் ,
FNPOவுடன் இணைந்த போராட்டங்களையும் , வேலை நிறுத்தங்களையும் முழு வெற்றியுடன் நடத்தி வருகின்ற NFPE
சம்மேளனத்தை இம்மாநாடு வாழ்த்தி மகிழ்கின்றது.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்:
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தலைவராக தோழர்.K.K.N.
குட்டி [வருமான வரித்துறை], மாபொதுச் செயலராக தோழர்.M.கிருஷ்ணன்[அஞ்சல்துறை]
அவர்களும் செயல்பட்டு வருகின்றார்கள்.
அகில இந்திய அளவில் உள்ள அனைத்து மத்தியப் அரசு ஊழியர்
சங்கங்களை ஒருங்கிணைத்து ஊழியர் நலன் காக்க வேண்டியும் , சார்வாதிகார
ஆட்சியாளர்களை கண்டித்தும் , பொது மக்கள் நலன் கருதியும், விலைவாசி அதிகரிப்பை
எதிர்த்தும் வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு
இயக்கங்கள் நடத்தி வரும் மத்திய அரசு
ஊழியர் மகா சம்மேளனத்திற்கு நமது கோட்டச்
சங்கத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
சகோதர சங்கங்கள்:
நமது கோட்டத்தில் உள்ள மற்ற
சங்கங்களான
1.
ஈரோடு -
NFPE R3, P4, GDS
2.
பவானி - NFPE
P3, P4, GDS
3.
கோபி -
NFPE P3, P4, GDS
4.
ஈரோடு - FNPO மற்றும் AIPRPA
உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் நமது
கோட்ட சங்கத்துடன் சுமூகமாக இணைந்து
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்கள்,இயக்கங்கள், யாவற்றிற்க்கும்
மிகப்பெரிய அளவில் ஆதரவு நல்கி வருகின்றன .வரும்காலங்களில்
இந்நிலை தொடர இம்மாநாடு வேண்டுகிறது.
ஈரோடு கோட்ட JCA
தோழர்.K சுவாமிநாதன் [NFPE]
தோழர்.J பாலமோகன்ராஜ்[FNPO] ஆகியோரை கன்வீனர்களாக கொண்டு ஈரோடு கோட்ட JCA
தமிழகத்திற்கே முன் மாதிரியாய் அனைத்து இயக்கங்களையும் வேலை நிறுத்தங்களையும்
இணைந்தே நடத்தி வந்தது . தற்போது FNPOவின் புதிய கன்வீனராக உள்ள தோழர்.P.மோகன்
நம்முடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
மத்திய அரசு ஊழியர் இணைப்புக் குழு
மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழு
செயலரான தோழர்.N.ராமசாமி நம்மோடு ITEF மற்றும் CENTRAL EXCISE ஊழியர்
சங்கங்களையும் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக இயக்கங்களை நிறைவேற்றுகிறார்.
நமது கோட்டச் சங்கத்தின் பல்வேறு
போராட்டங்களுக்கு நல்கி வரும் ஆதரவை
இணைப்புக் குழு தொடர வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
ஈரோடு – மத்திய மாநில ஊழியர் சங்க கூட்டமைப்பு:
ஈரோடு மாவட்டத்தில்
உள்ள மத்திய/மாநில அரசு ஊழியர் , ஆசிரியர் மற்றும் மத்திய பொதுத்துறை
ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் மற்ற
மத்திய/மாநில தொழிற்சங்கங்கள் நடத்தும் இயக்கங்களுக்கு நமது NFPE சங்கம் ஆதரவு
தெரிவித்தும் அதே சமயத்தில் நமது சங்கம் நடத்தும் இயக்கங்களுக்கு ஏனைய மத்திய/மாநில
சங்கங்கள் ஆதரவு தெரிவிப்பதுமான ஆரோக்யமான தொழிற்சங்க உறவுமுறை நமது ஈரோடு
மாவட்டத்தில் இருக்கிறது. மேலும் ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு தலைவர்களை ஈரோடு
மாவட்டத்திற்கு அழைத்து சிறப்பானதொரு கருத்தரங்கும் இந்த கூட்டமைப்பின் சார்பில்நடத்தப்படுகிறது.
09.02.2018 அன்று “மக்கள் சேமிப்பும் –வங்கிகளை சீரழிக்கும் FRDI சட்டமும்” & நம்
வாழ்வும் பண்பாடும் என்ற தலைப்புகளிலும், 13.02.2019 அன்று “பொதுத்துறை
பாதுகாப்பும் –தொழிலாளர் வர்க்க கடமையும்” & “தாராளமய யுகத்தில் மனிதமும்
பொருளாதாரமும்” போன்ற தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட்டது. இந்த
கூட்டமைப்பிற்கும் , இந்தகூட்டமைப்பின் convenor தோழர்.பரமசிவம் BSNL அவர்களின்
சீரிய ஒருங்கிணைப்பிற்கும் நமது கோட்ட சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது
கோட்ட நிர்வாகத்துடனான உறவு
நமது கோட்டத்தில் கடந்த 08.05.2017 முதல் 31.07.2019 வரை
திரு.சுரேக் ரகுநாதன் IPS அவர்கள் முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளராக இருந்து
வந்தார். கடந்த மாநாட்டில் நமது சங்கம் சார்பில் வைத்த கோரிக்கைகளான காலாவதியான
கணினிகளை மாற்றுவது ,பிரிண்டர்களை மாற்றுவது, UPS பேட்டரிகளை
மாற்றுவது, இன்னும் சில கோரிக்கைகள் அவரால் நிறைவேற்றப்பட்டன. பொதுவாக 2018
மற்றும் 2019 வருடத்திய சுழல் மாறுதலின்
போது நமது ஊழியர்களின் விருப்ப இடமே கிடைக்க அவர் உத்தரவிட்டார். LSG பதவி உயர்வு
இடமாறுதல்களில் சில அசௌகரியங்கள் இருந்ததை நமது கோட்டச்சங்கத்தின் தலையீட்டினால்
சரிசெய்யப்பட்டது.
மாதாந்திர கூட்டங்களை ஒவ்வொருமுறையும் சரிவர நடத்துவது ,
கோட்ட சங்க கடிதங்களுக்கு சரியான வகையில் உடனடியாக பதில் அளிப்பதுபோன்றவற்றை கோட்ட
நிர்வாகம் இனி வரும் நாட்களில் உறுதி செய்ய வேண்டுமென இந்த மாநாடு கேட்டுக்
கொள்கிறது. நமது கோரிக்கைகளை ஒவ்வொரு மாதந்திர சந்திப்பின் போதும் பொறுமையாகவும்
தெளிவாகவும் கேட்டு, அதன்படி சரியான தீர்வினை அளிக்க நடவடிக்கை எடுத்த வகையிலும் ,
கனிவான அணுகுமுறைக்கும், நமது SSPOs அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பில்
நன்றிகள்.
கோட்ட சங்கத்தின் கடிதங்கள்:
நமது சங்கத்தின் சார்பில் நிர்வாகத்திற்குக்கும்/மத்திய,மாநில
சங்கத்திற்கும் இதுவரை அனுப்பிய கடிதங்களில்
ஒருசிலவற்றின் பொருள்கள் மட்டும் கீழே அனைவரின் பார்வைக்கும் சமர்பிக்கபடுகின்றது..
S.no
|
DATE /MONTH
|
SUBJECT
|
1
|
20.04.2018
|
CSI Migration in Erode division
|
2
|
28.08.2018
|
Threatening of Staff by ASPOs(Erode south)at Sivagiri
SO
|
3
|
Sep-18
|
Requisition for manpower support to CPC Erode
|
4
|
Oct-18
|
DARPAN
implementation in BOs under
Erode division – reg
|
5
|
01.12.2018
|
Requisition for the supply of external antenna for the
BO DEVICE MCD
|
6
|
25.02.2019
|
Filling up of LSG Posts
|
7
|
06.03.2019
|
Supply of Steel racks (for Placing UPS batteries) and
Water purifier in POs
under Erode Division |
8
|
06.03.2019
|
Updating the Details of Bulk Addressee & Customer
Details In SAP
|
9
|
06.03.2019
|
Delay in Facility Change and Role Allocation in SAP [IM
& EP
|
10
|
06.03.2019
|
Payment of Advance of TA for the eligible officials
during their In-House Training
|
11
|
06.03.2019
|
Empowering the Logistics Post Under Erode Division
|
12
|
07.03.2019
|
Supply of copies of important orders and Instructions
to Union
|
13
|
07.03.2019
|
Repair and Re-painting work for Dept. Buildings Under Erode
Division
|
14
|
20.06.2019
|
Issues/Suggestions wrt RICT Device and Server
|
15
|
27.06.2019
|
Requisition for the supply of SALARY SLIP of GDS
officials under Erode Division
|
16
|
27.06.2019
|
Grant of Advance of TA
|
17
|
19.07.2019
|
Obtaining signature and initials of officials under
Erode Division
|
கோட்ட சங்கத்தின் WHATSAPP குழு
கடந்த 11.03.2018 முதல் நமது ஈரோடு கோட்ட சங்கத்தின்
சார்பில் புதிதாக ஒரு whatsaap குழு NFPE P3 Erode என்ற பெயரில் துவங்கப்பட்டது.. நாளும் 40 WHATSAAP குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு
, பல்வேறு தகவல்களை குப்பை போன்று அளித்து வரும் இந்த காலகட்டத்தில் நமது கோட்ட
சங்கத்தின் WHATSAAP குழு, சிலகட்டுப்பாடுகளுடன் பராமரிக்கப்படுகின்றது. அதன்
சிறப்பு அம்சங்களில் சில கீழ்வருமாறு
v பதிவிட அனுமதி - தோழமைகளின் துறை சார்ந்த இடர்பாடுகள்/கோரிக்கைகள் , தத்தம் அலுவலகங்களில்
உள்ள இடர்பாடுகள் / கோரிக்கைகள் / கோட்ட சங்கத்தின் செயற்பாடுகள், NFPE சம்மேளனத்தின்
கீழ் உள்ள மாநில / மண்டல.கோட்ட / கிளை செய்திகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட)
v பதிவிட கூடாதது – புகைப்படங்கள் / காலை இரவு வணக்கம் / குறிப்புரைகள் / தேவையில்லாத மற்றும்
சம்பந்தமில்லாத பதிவுகள் / வாழ்த்துக்கள் / videos / மத
சம்பந்தமான பதிவுகள் / அரசியல் / தனி மனித துதி
v குழுவில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களுக்கும்
அவரவர் கருத்தை [துறை / சங்கம் சார்ந்த] எப்பொழுது வேண்டுமானாலும் கூறும்
சுதந்திரம் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
v தோழமைகளால் குழுவில் பதியப்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் / பொருளிற்கும்
கோட்ட சங்கத்தின் சார்பில் உடனடியாக பதில் / தெளிவுரை அளிக்கபடுவது
v சங்கத்தின் அனைத்து வகை இயக்கங்களையும் உடனுக்குடன் அனைத்து
உறுப்பினர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக இருப்பது
v நமது அஞ்சல் துறையின் இயக்குனரக அளவில் / தமிழ்நாடு அஞ்சல்
வட்ட அளவில்/ மேற்கு மண்டல அளவில்/கோட்ட அளவில் அளிக்கப்படும் அனைத்து orders/rulings உடனுக்குடன் பதியப்படுகின்றது
இதனால் நமது சங்கத்தின் சார்பில் NOTICE பிரிண்டிங் செலவு
கணிசமாக குறைந்துள்ளது கூடுதல் நன்மை.
கோட்ட சங்கத்தின் வலைத்தளம்
நமது கோட்ட சங்கத்தின் ITwing தோழமைகளின் சீரிய முயற்சியாள
நமது கோட்ட சங்கத்தின் வலைதளமான http://nfpeerode.blogsopt.com சிறப்பான முறையில் பராமரிக்கப் பட்டு வருகின்றது. கோட்ட
சங்கத்தின் கடிதங்களை, இயக்கங்களை, சங்க தொடர்பான புகைப்படங்களை, வாழ்த்துகளை
இன்னும் பல ஆக்கப்பூர்வமான பதிவுகள் அன்றாடம் பதிவேற்றப்படுகின்றது. கோட்டச்
சங்கத்தின் செயற்பாடுகளை எப்பொழுது வேண்டுமானாலும் மேற்கூறிய வலைத்தளத்தில் சென்று
அறிந்து கொள்ளலாம் என்பதை இந்த மாநாடு மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நமது கோட்டச்
சங்கத்தின் சார்பில் வலைத்தளம் துவங்கியது முதல் இது வரை சுமார் 85000க்கும் மேலாக
VIEWS உள்ளது என்பதே நமது சங்க வலைதளத்தின் பெருமையைப் பறைசாற்றும்.
PUBLICATIONS
நமது கோட்டச் சங்கமானது துறை சார்ந்த தகவல்கள் , ஊழியர்
நலன் சார்ந்த தகவல்கள் , சம்மேளன, அகில இந்திய சங்க , மாநில சங்க ,ஓய்வூதியர் சங்க
,உலகெங்கும் உள்ள உழைக்கும்
வர்க்கத்தினரின் இயக்கங்கள் போன்று பல செய்திகளை அறிந்து கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட
புத்தகங்கள் / மாத இதழ்களைப் பெற்று தொழிற்சங்கத்திற்கென தனி நூலகம் அமைக்கும்
முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்
a.
VENTURE
(Volumes 1 & 2)
b.
STUDY
MATERIAL supplied in various union workshops
c.
SWAMY’s
HANDBOOK 2019
d.
TRADE
UNION HISTORY & MOVEMENTs
e.
AIPEU
Group ‘C’ constitution
மாத இதழ்கள்
A.
POSTAL
CRUSADER - NFPE சம்மேளன செய்திகள்
அறிந்து கொள்ள
B.
DAK
JAGRITI -
மத்திய சங்கத்தின் செய்திகள் அறிந்து கொள்ள
C.
அஞ்சல்
முழக்கம் - மாநில சங்கத்தின் செய்திகள்
அறிந்து கொள்ள
D.
உழைக்கும்
வர்க்கம் – அஞ்சல் ஊழியர் போன்ற பல்வேறு தொழிலார்களின் இயக்கங்களை அறிந்து கொள்ள
E.
PENSIONER’S
POST -ஓய்வூதியர் பலன்கள்/உரிமைகள்
பற்றிய செய்திகள்
F.
SWAMY’S
NEWS - மத்திய அரசின் சட்ட திருந்தங்கள் ,
CASE LAWS, ஊழியர் நலன் சட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள
இப்படியாக பல புத்தகங்களை தொகுத்து நமது கோட்டச் சங்கமானது
ஒரு தகவல் களஞ்சியமாக செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட புத்தகங்களை படிக்க
விரும்பும் தோழமைகள், நமது கோட்டச் சங்கத்திடம் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டுப் பெற்று , தெளிவு கொள்ளலாம் . மேலும்
மேற்கண்ட புத்தகங்கள்/ மாத இதழ் செய்திகள் உடனுக்குடன் அவரவருக்கே கிடைக்க
வேண்டும் பட்சத்தில், அவரவருக்கு மாதா மாதம் சம்பந்தப்பட்ட இதழ்கள் அவரவர் வீடு /
அலுவலக் முகவரி தேடி வருவதர்ற்கு கோட்ட சங்கம் முழு உதவி செய்ய காத்து
கொண்டிருக்கிறது என்பதையும் இம்மாநாடு மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிவகிரி/பாசூர்/ஊஞ்சலூர் முறைகேடுகளும் நமது சங்கத்தின்
செயற்பாடுகளும்
v மூத்த தோழரும் தமிழக அளவில் பெயர்பெற்ற DEFENCE ASSISTANTமான
நமது தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்களை நமது ஈரோடு தலைமை அஞ்சலகத்திற்கு வரவைத்து
நமது தோழமைகளுக்கு சிறப்பானதொரு ஆலோசனைகளும் / தெளிவுரையும் / தைரியமும்
அளிக்கப்பட்டது
v பாசூர்,சிவகிரி முறைகேடுகளில் தொடர்புள்ள முக்கிய
குற்றவாளிகளிடமிருந்து, CBI அதிகாரிகள் முன்னிலையில் முறைகேடு பணத்தை திரும்ப
செலுத்தும் வகையில் BOND PAPERல், agreement கையெழுத்து
வாங்கியது
v ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில் நமது தோழமைகள் ,
பாசூர்,சிவகிரி முறைகேடுகளில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளிகளை சிவகிரி சென்று
நேரில் சந்தித்தல்
v அவ்வப்போது மாநில சங்கத்தை சந்தித்தல் / ஆலோசனை பெறுதல்
v 11.06.2019 அன்று சிவகிரி / பாசூர் முறைகேடு குறித்தும் ,
மற்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொருட்டும் சங்க முன்னோடிகளுடன் ஈரோடு
கோட்டசங்க தோழமைகள் சந்திப்பு
v ஒவ்வொரு முறையும் STATEMENT அளிக்கும் போதும் , charge sheetக்கு reply
அளிக்கும்போதும் நமது தோழமைகளுக்கு தகுந்த ஊக்கம் மற்றும் ஆலோசனை தருவது
v முறைகேடுகளில் பாதிக்கப்பட்ட அப்பாவி ஊழியர்களுக்கு ,
முக்கியமாக Rule 16 & Rule 14 பெற்ற தோழமைகளுக்கு , நமது முன்னால் அகில இந்திய செயலர்
தோழர் . KVS, தமிழ் மாநிலத்தில் உள்ள தலைசிறந்த DEFENCE ASSISTANTஆன
மீனாட்சி சுந்தரம் , மத்திய சென்னை கோட்ட செயலர் தோழர் செந்தில்குமார் மற்றும் பல
தோழமைகளை சந்தித்து ஆலோசனை பெறுதல்
v கோட்ட நிர்வாகத்தின் போக்கை கண்டித்து பல்வேறு
ஆர்பாட்டங்கள்
v உண்ணாவிரதப் போராட்டம் , வேலைநிறுத்தம், உள்ளிட்ட
அடுத்தகட்டப் போராட்டங்கள் இனிவரும் காலங்களில் மிகவும் வலுவாக நடத்தப்படும்
தீர்க்கபட்ட பிரச்சனைகள்
v நீண்ட காலமா பிரச்சனையாக இருந்த ஈரோடு ரயில்வே காலனி SO,
கருங்கல்பாளையம் SO, ஈரோடு collectorate
SO போன்ற அலுவலக நேரம் split முறையில்
இருந்து regular timeக்கு மாற்றம் செய்யப்பட்டது
v ஈரோடு மார்க்கெட் அலுவலக் கட்டிடம் இடமாற்றம்
v தோழர் கோபிநாத் அவர்களின் HBA கழிவுத் தொகை பட்டுவாடா
v ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் தோழியர்களின் ஒப்புதலின்றி துவங்க
இருந்த DAY CARE CENTREஐ தடுத்து நிறுத்தியது
v திண்டல் SOவை Class ‘C’ல் இருந்து Class ‘B’ ஆக UPGRADE செய்தது
v அனைத்து அஞ்சலகத்திற்கும் தேவையான computers, printers, UPS
பாட்டரிகள் உள்ளிட்டவை ஓரளவிற்கு விநியோகம் செய்யப்பட்டது
v அனைத்து அஞ்சலகதிற்கும் தேவையான CASH COUNTING MACHINE
விநியோகம் செய்யப்பட்டது
v நீண்ட காலமாக பட்டுவாடா செய்யபடாமல் இருந்த TA உள்ளிட்ட
பில்களை, மண்டல அளவில் நமது சங்கத்தின் இடைவிடாத கோரிக்கையால் அதிக அளவில் FUND
ஒதுக்கப்பட்டு பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றது
v CSI MIGRATION போதும் , DARPAN MIGRATION போதும் கோட்ட
நிர்வாகத்தை வலியுறுத்தி ஈரோடு கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகதிற்கும்
MATERIAL விநியோகம் செய்யப்பட்டது.
v CBS FINACLE MENUS அடங்கிய ஒரு குறிப்பேடு ஒன்றை ஈரோடு
கோட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தலைமை/ துணை அஞ்சலகதிற்கும் சங்கத்தின்
சார்பில்/செலவில் விநியோகம்
செய்யப்பட்டது.
v ACTING/OFFICIATING SPM பொறுப்பை பார்த்து வரும் தோழமைகள்
தங்களது HRA பாதிக்காதவண்ணம் கோட்ட நிர்வாகத்துடன் பேசி ஒரு ADJUSTMENT
செய்யப்பட்டு வருகின்றது.
v விடுமுறை நாட்களில் PMJAY வேலை செய்வதை தவிக்க நடவடிக்கை
எடுத்தது
v BO SB/SSA கணக்குகள் interest posting குறித்து கோட்ட சங்க தோழமைகளிடம் விழிப்புணர்வு பரப்புதல்
v தேர்ந்தெடுக்கபட்ட துணை அஞ்சலகங்களுக்கு SIFY BANDWIDTH
அதிகரிக்க செய்தது
v பள்ளிபாளையம் தோழர் பரமேஸ்வரன் மற்றும் கொடுமுடி தோழர்
முத்துக்குமார் அவர்களுக்கும் PAY FIXATION குளறுபடிகளை சரிசெய்தது
v ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஈரோடு தலைமை அஞ்சலக NPO
COUNTERகளை CLOSE செய்தது
v தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களுக்கு குடிநீர் வசதியை உறுதி
செய்ய RO PURIFIER விநியோகம்
v மற்ற கோட்டங்களைக் காட்டிலும் நமது கோட்ட BOக்களுக்கு
பயன்படும் வகையில் ANTENNA , SOLAR PANEL மற்றும் SIM மாற்றி தந்தது
v கோட்ட நிர்வாகம் முறையாக பயிற்சி அளிக்காமல் அமல்படுத்திய DARPAN
திட்டம் குறித்து ஈரோடு கோட்ட சங்கம் பிரத்யேக பயிற்சி மற்றும் ஆலோசனை வகுப்பு
நடத்தியது.
எனப் பல பிரச்சனைகளுக்கு நமது கோட்டச் சங்கத்தின் மூலம் தீர்வு எட்டியுள்ளோம்.
இது போன்ற எடுத்துகாட்டுகள் நமது கோட்ட சங்கத்தின் செயற்பாட்டினை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளதை இம்மாநாடு
பெருமையுடன் கூறிக் கொள்கிறது.
தீர்க்கபட வேண்டிய பிரச்சனைகள்:
v மீதமுள்ள அஞ்சலகங்களில் உள்ள பழைய COMPUTERS,பழுதடைந்த
PRINTERS மற்றும் UPS பேட்டரிகளை மாற்றி தருவது
v ஈரோடு HO, கருங்கல்பாளையம் SO உள்ளிட்ட துறையின் சொந்த
கட்டிடங்களை புனரமைத்தல்
v கழிப்பறை வசதி கூட இல்லாத திண்டல் SO, நாளும்
தரிப்பட்டரையின் தடதட சத்தத்துடனும், மாசடைந்த காற்றை சுவாசித்து பணியாற்றும்
வகையிலும் உள்ள வீரப்பசத்திரம் SO, இடிபாடுகளுடன் உள்ள ஈரோடு RC SO மற்றும் அவல்
பூந்துறை SO உள்ளிட்ட அலுவலக கட்டிடங்களை இடமாற்றம் செய்வது
v கொடுமுடி SO
உள்ளிட்ட அலுவலகங்களுக்கு GENERATOR வசதி ஏற்படுத்தி தருவது
v கோட்டத்தில் உள்ள அனைத்து காலாவதியான UPS UNITS அனைத்தையும்
மாற்றி தருவது
v ஈரோடு தலைமை அஞ்சலகம் GENERATOR பழுது பார்ப்பது
v கருங்கல்பாளையம் SO உள்ளிட்ட அஞ்சகங்களுக்கு இரவு காவலர்
நியமிப்பது
v பள்ளிபாளையம் தோழர் பரமேஸ்வரன் உள்ளிட்ட தோழமைகளின் NPS
UNADJUSTED AMOUNT சரிசெய்வது
v ஈரோடு தலைமை அஞ்சலகத்திற்கு GDSSV பதவியை திருப்பிக்
கொணர்வது
v ஒவ்வொரு பயிற்சிக்கும் , DEPUTATION போன்றவற்றிற்கும்
தகுதியான TA ADVANCE தொகையினை சரியான சமயத்தில் DPA மூலம் PROCESS செய்து தருதல்
v UNSCIENTIFIC & UNREALISTIC TARGET நிர்ணயித்து கொடுமை
செய்து வரும் வரும் மேற்கு மண்டல PMGஇன் அராஜக போக்கை கண்டித்தல்
v நமக்கென ஒரு SSPOs இல்லாத காரணத்தினால் , சேலம் கிழக்கு
SSPO நமது கோட்ட தோழமைகளின் விடுமுறை விண்ணப்பத்தை சுருக்குவது
போன்ற பல பிரச்சனைகள் நம் கோட்டத்தில் உள்ளன. இவை அனைத்திற்கும்
நமது கோட்டச் சங்கம் தொடர்ந்து போராடி வருவதை நாம் அனைவரும் அறிவோம். மேற்கண்ட
பிரச்சனைகளைத் தீர்க்க நாம் முன்னைக் காட்டிலும் ஒற்றுமையாகவும், போராட்ட
உணர்வோடும் இருந்தால் , நம் பிரச்சனைகளுக்கு ஏற்ற தீர்வானது நம் முன்னே வந்து நிற்கும் என்பதையும்
இம்மாநாடு வாயிலாக வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
100 RTI விண்ணப்பங்கள் நிர்வாகத்தை நோக்கி
நமது சங்கம் மூலம் பல்வேறு வகையில்
நமது கோரிக்கைகளை முன் வைத்தாலும் , சில சமயங்களில் நிர்வாகம் செவி சாய்ப்பதில்லை
. ஆதலால் கடந்த 20.07.2019 அன்று நடைபெற்ற நமது கோட்டச் சங்கத்தின் செயற்குழுவில்
முக்கிய பொருளாக [4/5]இதனை விவாதித்தோம். கோட்டத்தில் நிலவும் பல்வேறு
பிரச்சனைகளுக்கு நிர்வாகத்திடம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியும் ,
நமது ஊழியர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் நமது ஈரோடு கோட்டச் சங்க உதவியுடன்
நமது தோழமைகள் [100+ உறுப்பினர்கள்] அனைவரும் நிர்வாகத்தை நோக்கி ஒரே குரலாக
நூற்றுக்கணக்கான RTI விண்ணப்பங்கள்
அனுப்பித் தகவல் பெறுவதென முடிவு செய்யப்பட்டது.
கஜா புயல் நிவாரணம்:
கடந்த டிசம்பர் 2018ல் வீசிய கடும் புயலான கஜாவின் சீற்றத்தால் நமது
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 6 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது
குறித்து அனைவரும் அறிவோம். இதனால் பாதிப்படைந்த அந்த பகுதி GDS தோழமைகளுக்கு
உதவிட வேண்டி நமது மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனை ஏற்று நாம் நமது ஈரோடு கோட்ட NFPE சங்கத்தின்
சார்பிலும் , ஈரோடு HO மனமகிழ் மன்றம் சார்பிலும் நமது தோழமைகளிடமிருந்து சுமார்
Rs.65,000/- ரூபாய் அறுபத்தி ஐந்தாயிரம் தொகைக்கும் மேல் வசூல்செய்து, நமது ஈரோடு
மாவட்டத்திலேயே துண்டு, லுங்கி, புடவை மற்றும் போர்வை அடங்கிய 120 செட்
துணிகளையும் மற்ற பொருட்களையும் சேகரித்து , திருத்துறைப்பூண்டி HO மற்றும் அதன்
கீழ் உள்ள BOக்களில் பணிபுரியும் GDS தோழமைகளுக்கு நமது கோட்டச் சங்கத்தின்
சார்பில் தோழமைகள் நேரிலேயே சென்று விநியோகித்து
வந்தோம் . தமிழ் மாநில அளவிலேயே அதிக தொகை வசூல் செய்து கஜா புயல் நிவாரணம் அளித்துள்ள
பெருமை நமது ஈரோடு கோட்ட NFPE சங்கத்தையே சாரும். இதை சாத்தியப்படுத்த உறுதுணையாக
இருந்த மனமகிழ் மன்ற செயலர் தோழர்.பிரவீன்குமார் அவர்களுக்கு நமது கோட்டச் சங்கத்தின் சார்பில் நன்றிகள்.
முடிவுரை:
தனியார்மயத்தை தாரளாமாக கட்டவிழ்த்து விடும் அதே கட்சியானது
திரும்பவும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளது நமது அஞ்சல் துறையின்
எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும். அரசியல் தலையீடு இருக்கும் வகையில்
RTI சட்ட திருத்தும் கொணர்ந்தது, தனியார் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் கட்ட பஞ்சாயத்து வரை ஒத்துழைப்பது போன்ற பல மக்கள் விரோத போக்கினை
கையாண்டு வரும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து கேட்க / சரிசெய்ய சுமார் 5
லட்சம் ஊழியர்கள் கொண்ட நம் அஞ்சல் துறை போன்றவற்றில் உள்ள மாபெரும்
தொழிற்சங்கங்களே சரியான அமைப்பாகும்.
மேலும்கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்படியான பல போராட்ட இயக்கங்களில்
தங்களை முழுமையாக இணைத்துக் கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் , ஈரோடு கோட்ட P3சங்கம்
சிறப்பாக செயல்பட ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி
இவ்வறிக்கையினை நிறைவு செய்து சமர்பிக்கிறேன்.
நன்றி
இடம்: ஈரோடு
நாள் :18.08.2019
தோழமையுடன்
N.
கார்த்திகேயன்
கோட்டச் செயலர்
[செயற் குழுவிற்காக]
NFPE - P3 , Erode
2017-18
Receipts and Expenditures
for the period from
01-04-2017 to 31-03-2018
RECEIPTS
Opening Balance
|
57,323.00
|
Subscription
|
59,700.00
|
Donation
|
48,000.00
|
Share from other Union
|
7,160.00
|
Interest 2016-17
|
1,165.00
|
Interest on Closed POSB
acc[old union acc]
|
478.00
|
TOTAL
|
1,73,826.00
|
PAYMENTS
Publications [DAK jagriti/Venture 1
& Trade Union History/Venture 2 & Constitution/Union DAIRY
2018/Spiral binding for Finacle Guide]
|
41,487.00
|
Quota to NFPE/All India/Circle Union
|
31,682.00
|
xerox
|
16,677.00
|
TA to sec, president and
other comrades
|
16,272.00
|
43rd Dvl
conference July2017
|
12,241.00
|
Dharna & Meeting exp
& IQ
|
3,345.00
|
shawl
|
2,492.00
|
Contribution to All TU
|
2,000.00
|
Taxi fare
|
1,700.00
|
Tea & Snacks
|
1,567.00
|
stationeries
|
692.00
|
Phone charges
|
600.00
|
Closing Balance
|
43,071.00
|
TOTAL
|
1,73,826.00
|
Details
of CB:
Cash
: NIL
POSB
Balance: Rs.43,071.00
AUDITOR REPORT FOR THE YEAR
2018-19
Certified
that I have checked receipt and expenditures with satisfactory results and
exhibits a true and correct picture of the accounts of union according to the
information available from the books and receipts of the union.
Sakthivel.D
Karthikeyan.N Sathyabama.c
Treasurer(Incharge) Secretary Auditor
NFPE - P3 , Erode
2018-19
Receipts and Expenditures
for the period from
01-04-2018 to 31-03-2019
RECEIPTS
Opening
Balance
|
43,071.00
|
Subscription
|
79,575.00
|
Donation
|
3,500.00
|
POSB
interest
|
1,959.00
|
TOTAL
|
1,28,105.00
|
PAYMENTS
Quota to
NFPE/All India/Circle Union
|
81,012.00
|
Purchase of
Printer & Accessories
|
13,700.00
|
Purchase of
Laptop
|
7,000.00
|
Publications/
Union journals
|
3,900.00
|
Circle
Council meeting expenditures
|
3,575.00
|
Meeting
expenditures
|
3,230.00
|
Xerox / Photo
copy expenditures
|
2,480.00
|
Contribution
to All TU, Erode
|
2,000.00
|
GDS meeting
expenditures
|
1,500.00
|
GDS DARPAN
Training expenditures
|
1,470.00
|
RO BMM
(Informal) expenditures
|
1,175.00
|
Shawl for
leaders/members
|
813.00
|
TA to sec
|
250.00
|
Postal
expenditures
|
248.00
|
stationeries
|
180.00
|
Closing
Balance
|
5,572.00
|
TOTAL
|
1,28,105.00
|
Details
of CB:
Cash
: NIL
POSB
Balance: Rs.5,572.00
AUDITOR REPORT FOR THE YEAR
2018-19
Certified
that I have checked receipt and expenditures with satisfactory results and
exhibits a true and correct picture of the accounts of union according to the
information available from the books and receipts of the union.
Sakthivel.D
Karthikeyan.N Sathyabama.c
Treasurer(Incharge) Secretary Auditor
No comments:
Post a Comment