MENU BAR

Saturday 5 October 2019

05.10.2019 ஆர்ப்பாட்டம்

தோழமைகளே...
நமது மத்திய அரசு ஊழியர் சம்மேளன அறைகூவலின்படி ,BONUS மற்றும் DA ஆணையை உடனடியாக உத்தரவிட வலியுறுத்தி நமது மத்திய அரசை கண்டித்து 05.10.2019 சனிக்கிழமை அன்று நமது ஈரோடு தலைமை அஞ்சலகத்தின் முன்பு ஈரோடு கோட்ட NFPE, FNPO மற்றும் AIPRPA ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து ஒரு மாபெரும் உணவு இடைவெளி ஆர்ப்பாட்ட இயக்கத்தை நடத்தியுள்ளது...

நமது ஈரோடு NFPE  கோட்டத் தலைவர் தோழர். V. அருண்குமார் அவர்கள் தலைமையேற்று நடத்த  , ஈரோடு NFPE கோட்டசெயலர் தோழர். செல்லமுத்து, AIPRPA கோட்ட செயலர் 
தோழர். N.ராமசாமி மற்றும் ஈரோடு கோட்ட FNPO உதவி செயலர் 
தோழர் .வெங்கடேசன் ஆகியோர் ஆர்ப்பாட்ட  உரையாற்ற, கோட்ட NFPE உதவி செயலர் தோழர். K.சுவாமிநாதன் அவர்களுடன் தோழமைகள் அனைவரும் கோஷங்கள் முழங்க, இறுதியாக ஈரோடு NFPE கோட்ட அமைப்பு செயலர் 
தோழர் N. கார்த்திகேயன் அவர்கள் நன்றியுரையுடன் சிறப்பாக நிகழ்த்த பட்டது இன்றைய ஆர்ப்பாட்ட இயக்கம்...

இனியும் மத்திய அரசானது BONUS மற்றும் DA ஆணையை உத்தரவிடுவதில் தாமதம் ஏற்படின் இனி வரும் அனைத்து நாட்களிலும் இந்த உணவு இடைவெளி ஆர்ப்பாட்டம் தொடரும் என்று இங்கு நாம் கூறிக் கொள்கிறோம்...

போராட்ட இயக்கங்களே ,உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமையை மீட்டெடுத்துத் தரும்...

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3..


ஆர்ப்பாட்ட இயக்கத்தில் எடுக்கப்பட்ட சில புகைபடங்களை அனைவரின் பார்வைக்கும் இங்கு நாம் பதிகின்றோம்.





















No comments:

Post a Comment