MENU BAR

Tuesday 1 December 2015

34 வருடங்கள் சர்வீஸ் முடித்த ஒரு சீனியர் தோழரை FNPO - கோட்டச் செயலரும் , JCA convener -ம் ஆன ஒருவரை எந்தவிதமான Norms அடிப்படையிலும் இல்லாமல் Sr PM க்கு எதிராக PMG அவர்களுக்கு பல முறை memorandum கள் கொடுத்த காரணத்திற்காக இந்த Deputation என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இவ்விவகாரத்தில் NFPE, FNPO மண்டல மற்றும் மாநிலச் செயலர்கள் உரிய இடங்களில் இப்பிரச்சனையை எடுத்து தீர்வு காண வேண்டுகிறோம்.



வேலியே பயிரை மேய்ந்த கதையாக :-

ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி அவர்கள் விதிகளுக்கு மாறாக தோழர் J. Balamohanraj  அவர்களை ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் இருந்து சூரம்பட்டி அஞ்சலகத்திற்கு Deputation அனுப்பி உள்ளார் . இந்த விசயத்தில் SSP அவர்கள் தலையிட்டு இந்த உத்தரவை மாற்ற வேண்டும் என் நேற்று (30.11.2015) JCA சார்பில் சந்தித்துப் பேசினோம். LRPA வைத்தான் Deputation அனுப்ப வேண்டுமென்பதில்லை - Sr PM யாரை வேணும்னாலும்  deputation அனுப்பலாம் என்று SSP அவர்கள் கூறுகிறார். அப்படியானால் LRPA என்ற SYSTEM எதற்காக ?


ஒரு அதிகாரி விதியை மீறுகிறார் என்று மேல்மட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் - அதைப் பற்றிய விசாரணையே இன்றி சட்டமே அப்படித்தான் என்றால் நாம் எங்கே செல்வது


தலைமை அஞ்சலகம் போன்ற ஒரு பெரிய அலுவலகத்தில்  Deputation அனுப்புவது யாரை என்ற எந்தவிதமான norms எதுவும் கடைபிடிக்கப் படக் கூடாதா?
 இவண் ,
K.Swaminathan
J.Balamohanraj
JCA Conveners
01.12.2015

No comments:

Post a Comment