MENU BAR

Thursday 17 December 2015

வாசிக்கவும் ... யோசிக்கவும் .



'சார்'

ஒருவிரல் தூக்கியபடி எழுந்தான்.

அனுப்பினேன்.


'சார்'

உடனே மற்றொருவன். 

அதட்டினேன்.


நொடிகள் நகர 

உள்ளேயே ஈரம் 

வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது 

என் அதிகாரம்.




கவிஞர் பழ. புகழேந்தி என்பவரின் கரும்பலகையில் எழுதாதவை" என்ற

கவிதைத் தொகுப்பின் ஒரு கவிதை. 

No comments:

Post a Comment