MENU BAR

Tuesday 8 December 2015

அகங்காரப் போக்கிலான ஈரோடு Sr PM-ஐ பணியிட மாற்றம் செய்யக் கேட்டு 08.12.2015 மதிய உணவு இடைவேளையில் ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஊழியர்கள் ஆர்த்தெழுந்து இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம்.












07.12.2015 அன்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டதும், இன்று 08.12.2015 மதியம் ஈரோடு தலைமை அஞ்சலகம் மற்றும் கோட்ட அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் NFPE, FNPO சங்கங்களின் P3, P4 & GDS   ஊழியர்கள் (ஒருவர் பாக்கியில்லாமல்) கலந்து கொண்டதும் - கொடுமையான ஊழியர் விரோத Sr PM அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டுமென்பதை முழுமையாக வலியுறுத்துவதை நிரூபிக்கிறது. NFPE, FNPO மண்டலச் சங்க மாநிலச் சங்க நிர்வாகிகள் இப்பிரச்சனையை உரிய இடங்களில் எடுத்து உடனடித் தீர்வு காண ஈரோடு அஞ்சல் JCA விழைகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கைகளாக மண்டல அளவில் போராட்ட

நடவடிக்கைகள் எடுக்கவும் ஈரோடு அஞ்சல் JCA வேண்டுகிறது.

No comments:

Post a Comment