MENU BAR

Thursday 10 December 2015

அன்புடன் ஒரு முக்கிய வேண்டுகோள்



தோழர்களே ! தோழியர்களே !
சமீபத்திய கடும் மழை வெள்ளத்தால் நமது சென்னை மாநகரம் முற்றிலும் சீர்குலைந்து மக்களை சொல்லொண்ணாத்  துயரத்தில் ஆழ்த்தியதை அனைவரும் அறிவோம். சென்னைவாழ் நமது அஞ்சல்துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான கால கட்டத்தில் நாம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது தலையான கடமையாகும். நமது மேற்கு மண்டல PMG  அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது SSP அவர்கள் இதற்கான வேண்டுகோளை வைத்துள்ளார்கள். நமது தோழர் , தோழியர்கள் தங்களால் முடிந்த உதவியை - பெட்ஷீட் , போர்வை , பாய் , எளிதில் கெட்டுப் போகாத உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, பிஸ்கட், உடைகள் , பாத்திரங்கள் முதலிய பல்வேறு பொருட்களை பொருட்களாகவோ , பணமாகவோ - SSP அலுவலக சுற்றறிக்கையில் கண்டுள்ளபடி கோட்ட அலுவலகத்தில் மனமுவந்து கொடுக்கும்படி JCA சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஈரோடு 638001/ 08.12.2015                                                                                                                              இவண் ,
K.Swaminathan
J.Balamohanraj
JCA Conveners

No comments:

Post a Comment