MENU BAR

Friday 10 May 2019

தோழர். NG படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம்

🚩 தோழர்.NG படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம்🚩 



தோழமைகளே.. 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய/மாநில சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறைந்த தோழர். NG அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் இன்று 09.05.2019 வியாழக்கிழமை அன்று மாலை 06:20  மணியளவில் ஈரோடு தாலுக்கா அலுவலகத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் நடைபெற்றது.. 
அதுசமயம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய/மாநில/பொதுத்துறை ஊழியர் சங்க தோழமைகள் திரளாக இந்த கூட்டத்தில் பங்கேற்று தோழர். NG அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியும், அவரின் உருவ படத்திற்கு மரியாதையும் செலுத்தினர்..

தோழர்.C.பரமசிவம்  BSNL அவர்கள் இந்த கூட்டத்தை தலைமையேற்று நடத்தினார்..

அதையடுத்து 
ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் CITU தலைவர் தோழர்.K.துரைராஜ் அவர்கள் மறைந்த தோழர். NG அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார்..

மேலும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கீழ்காணும் தோழமைகள் தோழர்.NG அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி மிகவும் கணத்த இதயதோடு உரையாற்றினார்கள்..

ஈரோடு அஞ்சல் NFPE-P3 சங்க கோட்ட செயலாளர் தோழர்.N.கார்த்திகேயன்,

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின்
மாநில பொது செயலாளர் தோழர்.ப.மாரிமுத்து,

DREU துணை தலைவர் தோழர்.K.சுப்ரமணியன்,

மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழுவின் செயலாளர் தோழர்.N.ராமசாமி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழர்.K.வெங்கிடு,

ஈரோடு அஞ்சல் NFPE P3 சங்கத்தின் கோட்ட தலைவர் தோழர்.செல்லமுத்து,

ஈரோடு AIIEA (North)செயலாளர் L.முருகானந்தம்,

ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் உதவி கோட்ட செயலாளர் தோழர்.K.சுவாமிநாதன் ,

BSNL ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழர்.மணி,

AIEDPA தோழர். NK,
RMS தோழர். ஜோதிலிங்கம்,
TNGEA தோழர். மனிபாரதி,
RMS தோழர். முருகேசன்

மற்றும் பல தோழமைகள் ,தோழர்.NG  அவர்களுடனான தொழிற்சங்க அனுபவத்தையும், படியினையையும் நம்முடன் மிக உருக்கமுடன் பகிர்ந்து கொண்டனர்.

நமது BNSL தோழர். C. பரமசிவம் அவர்கள் ஆரம்ப கால NFPTE  சங்க வரலாற்றில் ஆரம்பித்து, தற்போதைய ஜனவரி 2019 வேலைநிறுத்த பணிகள் வரையான தோழர் NG அவர்களுடனான தொழிற்சங்க பயணத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்..

இறுதியாக ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் CITU தலைவர்
தோழர்.K.துரைராஜ் அவர்கள் பேசும் போது முதலாளித்துவத்தின் அடக்குமுறைகள் பற்றியும், உழைக்கும் வர்க்கத்தின் பரிதாப நிலை குறித்தும், தொழிற்சங்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றியும்,Contract labours abolishing act பற்றியும், தோழர். NG உடனான தொழிற்சங்க, வர்க்க இயக்கங்கள் குறித்தும் உரையாற்றினார்..

மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,DREU, insurance பொது ஊழியர் சங்கம்,AIIEA (South), AIIEA (North), BEFI,BSNL ஊழியர் சங்கம்,தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ,AIPRPA உள்ளிட்ட பல தொழிற்சங்க நிர்வாகிகள்,தோழமைகள் இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றனர்..

கூட்டம் சுமார் சுமார் இரவு 07.45 மணிவரை நடைபெற்றது.. கூட்டத்தின் நிறைவு பகுதியில் மறைந்த தோழர். NG அவர்களுக்கு மௌன அஞ்சலி செலத்தப்பட்டத

ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் முன்னோடிகளான தோழர்கள்.NR, மயில்சாமி,பவானி தோழர்.பச்சையப்பன், ஈரோடு கோட்ட சங்கத்தை சார்ந்த தோழர்கள்  செல்லமுத்து, சுவாமிநாதன்,சக்திவேல், கோபிநாத், அருண்குமார், மணிகண்டன், பிருத்விராஜ், கணபதி,வெள்ளிங்கிரி, பெருந்துறை தோழர். நரசிம்மன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்ட அளவில் நமது மறைந்த தோழர். NG அவர்களுக்கு இந்த சிறப்பு மரியாதை கூட்டத்தை நிகழ்த்த ஒத்துழைத்து ஒன்றிணைந்த ஈரோடு மாவட்ட அனைத்து மத்திய, மாநில ,பொதுத்துறை ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் ,Convenor என்ற முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நமது BSNL தோழர். C. பரமசிவம் அவர்களுக்கும் 
நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

 தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3🚩

குறிப்பு : கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைபடங்களை கீழே காணலாம்.












No comments:

Post a Comment